மார்புச் சளியை நிரந்தரமாகக் அடித்து விரட்டும் அற்புத துவையல்...எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
பருவ நிலைகள் மாறுகிற பொழுது பெரும்பாலும் நாம் சந்திக்கிற பிரச்சினை சளி, இருமல் தான்.
அதை அடியோடு விரட்ட ஆயிரக்கணக்கில் செலவு செய்து மருந்து மாத்திரைகளை வாங்குவதை விட சில உணவின் மூலம் குணப்படுத்துவது ஆரோக்கியமானதாக இருக்கும்.
நம்முடைய முன்னோர்கள் மார்புச் சளியை உணவே மருந்து என்ற முறையில் எப்படி விரட்டியடித்தார்கள் என்று பார்க்கலாம்.

குளிர்காலத்தில் அதிகம் எடுத்து கொள்ளும் உணவில் ஒன்று தும்பை துவையல்.
இது நீண்ட நாட்களாக நுரையீரலில் தேங்கி இருக்கும் மார்புச் சளியைக் கரைத்து வெளியனுப்பும் அற்புத குணம் கொண்டது.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வர மார்புச் சளி கரையும்.

தும்பைப் பூ துவையல் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- தும்பைப் பூ - ஒரு கைப்பிடி
- மிளகு - 10
- காய்ந்த மிளகாய் - 1
- கறிவேப்பிலை - 1
- ஈர்க்கு பூண்டு - 4
- பல் புளி - ஒரு கொட்டையளவு
- உப்பு - தேவையான அளவு
- சிறிய வெங்காயம் - 2
- தேங்காய் துருவல் - அரை மூடி
செய்முறை
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நன்கு துவையல் பதத்திற்கு சிறிது மட்டும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேவைப்பட்டால் தும்பைப் பூ சிறிது அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த துவையலை இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றோடு சாப்பிடலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த துவையலை செய்து சாப்பிட்டு வந்தாலே போதும்.
மார்புச் சளி கரைய ஆரம்பிப்பதை உணர்வீர்கள்.