தாத்தா, பாட்டி துளசியை வீட்டில் வைத்து வணங்கியது இதனால் தானா? அசரவைக்கும் நன்மைகள்
புனிதமாக கருதப்படும் விடயங்களில் துளசிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
இந்துக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டில் ”துளசி மாடம்” என்ற பெயரில் சிறப்பான இடத்தில் வைத்து தினமும் அதனை கடவுளாக போற்றி வணங்குவார்கள்.
அதிகாலை மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பிரம்ம முஹூர்த்தம் என்று சொல்லுவார்கள்.
அதாவது இந்த வேளையில் தான் இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாதகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல இருக்கும்.
இந்த நேரத்தில் எழுந்து துளசி மாடத்தில் விளக்கேற்றி, மாடத்தை சுற்றிவந்து மனமுருகி வேண்டுவது வழக்கம்.
இதேபோன்று கோவில்களுக்கு சென்றாலும் துளசி தீர்த்தம், துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள்.
இது ஏன் என்று என்றாவது சிந்தததுண்டா? துளசிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்து பார்த்ததுண்டா?
நாம் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் என கடைபிடிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால் ஆயிரமாயிரம் அறிவியல் ரீதியான காரணங்கள் குவிந்து கிடக்கின்றன.
தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும்.
ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.
சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கொசுக்கள், பூச்சிகள் வராது. காய்ச்சல், சளி முதற்கொண்டு தோல், முடி, வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்று ஏற்படாது இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என பல்வேறு காரணங்களுக்காக துளசி பயன்படுகிறது.
துளசி இலையை அப்படியே உட்கொள்ள முடியும் என்பதால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உண்ண கொடுக்கலாம்.
துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல்வேறு வியாதிகளுக்காக சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துளசி எண்ணெயில் அதிகளவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும், நீரிழிவு நோயை தடுக்கும், உயர் ரத்த அழுத்ததை குறைக்கும்.
நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கும் துளசி சிறந்த மருந்து. உடல் செயல்முறைகளை சமநிலைப்படுத்தும்.
சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும். ஹெபடைடிஸ், மலேரியா, காசநோய், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற நோய்களை சரிசெய்ய உதவும்.
மேலும், துளசியில் உள்ள லினோலிக் என்ற அமிலம் சருமத்துக்கு மிகவும் நன்மை பயக்க கூடிய பொருளாகும்.
தோல் நோய்கள், அரிப்பு போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.
துளசியில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை அறிந்ததால் தான், நம் முன்னோர்கள் தங்கள் வீட்டில்
துளசி மாடம் அமைத்து அதனை கடவுளாக போற்றிவந்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை!!!