கால்களில் இரத்த உறைவு? Thrombophob Ointment பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் கால்களில் இரத்தம் உறைதலால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க Thrombophob Ointment பயன்படுத்தப்படுகிறது.
அதனால் ஏற்படும் வலி மற்றும் தொற்றுகளை குணப்படுத்தவும் செய்கிறது.
வீக்கத்தின் மீது விரைந்து செயல்படுவதால் வலியை குறைப்பதுடன் மேலும் மேலும் தீவிரமடையாமல் தடுக்கும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்கள் முழுமையும் பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
குறித்த இடத்தை நன்கு சுத்தமாக்கிய பின்னர் காட்டன் துணிக்கொண்டு நன்கு துடைத்துவிட்டு Thrombophob Ointmentயை பயன்படுத்தவும்.
பெரும்பாலான நபர்களுக்கு இது எந்தவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது, சிறிய அளவில் எரிச்சல் இருக்கலாம், இது தற்காலிகமானதே.
எனினும் எரிச்சல் தொடர்ந்தாலோ, சிவந்து போனாலோ மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
சூரிய ஒளி பட்டால் அதீத உணர்திறன் கொண்டது என்பதால் சன் ஸ்கிரீன் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெட்டுப்பட்ட இடங்களில் மறந்தும்கூட Thrombophob Ointmentயை பயன்படுத்த வேண்டாம்.
கண்கள், வாய் பகுதிகளில் பட்டுவிட்டால் உடனடியாக நீரை கொண்டு சுத்தம் செய்யவும்.
கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை பயன்படுத்த வேண்டாம்.