தொண்டை வலியினால் அவதிப்படுகிறீர்களா? உடனே தீர்வு கொடுக்கும் வீட்டு வைத்தியம்
பருவ காலங்களின் மாற்றம் ஏற்பட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதுடன், இவற்றுடன் தொண்டை வலியும் ஏற்படும்.
குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை கரகரப்பு, வலி ஆகியவற்றில் இருந்து விடுபட ஆயுர்வேத முறையில் மருத்துவ முறைகளை காணலாம்.
தொண்டை வலிக்கு ஆயுர்வேத குறிப்பு
தொண்டை வலி, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டால் உப்பு, மஞ்சள் அல்லது திரிபலா சூரணம் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து அடிக்கடி வாய் கொப்பளித்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.
ஆறு மாதங்களுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இதனை நேரடியாக கொடுக்கமுடியாது என்பதால், தாய் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சென்றடையுமாம்.
அதே போன்று குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வசும்பு கொடுக்கலாம்.
சளி தொல்லையால் அவதிப்படும்போது சுக்கு நல்ல மருந்தாக காணப்படுகின்றது.மசாலா டீயில் இதனை பயன்படுத்தலாம். வெந்நீரில் சுக்கை கொதிக்கவிட்டு அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.
காய்ச்சல், நெஞ்சு சளி, ஜலதோஷம், போன்ற நோய்களுக்கு கற்பூரவள்ளியை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
