பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் திரண்ட மக்கள்!! நெகிழ்ச்சியான உண்மை சம்பவம்
இந்தியாவின் கர்நாடகாவில் பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் ஒட்டுமொத்த மக்களுமே கலந்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பசவா என்ற ஹச்சா பாஸ்யா(வயது 45), மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த பசவா, அப்பகுதி மக்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தார்.
அனைவரையும் அப்பாஜி என அழைக்கும் பசவா, 1 ரூபாய் மட்டுமே யாசகமாக பெறுவாராம், அதிகம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டாராம்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்து ஒன்றில் சிக்கி பசவா உயிரிழந்தார், இதனால் சோகமான அப்பகுதி மக்கள், பசவாவின் இறுதிச்சடங்கை நடத்த முடிவு செய்தனர்.
இதன்படி ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்து கொண்டனர், பசவாவுக்கு யாசகம் வழங்கினால் நல்லது நடக்கும் எனவும் அப்பகுதி மக்கள் நம்பி வந்துள்ளனர்.
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக, மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
