தோப்புக்கரணம் போடுவது ஏன்? உடல் ஆரோக்கியத்தில் நிகழும் அதிசயம்
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
விநாயகர் சதுர்த்தி
பொதுவாக விநாயகர் அவதரித்த அல்லது பிறந்த நாளே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அதன் வகையில், இந்த ஆண்டு வளர்பிறை சதுர்த்தி நாள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வருகிறது.
அந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படவுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கும் போது தோப்புக்கரணம் போட்டும், தலையில் குட்டிக்கொண்டும் வழிபடுவார்கள்.
பொதுவாக, இவை அனைத்தும் நம்முடைய ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் ஒன்று ஆகும்.காலில் மெட்டி அணிவதன் மூலமும், குங்குமம் அணிவது போன்ற பலவற்றில் அறிவியல் நன்மைகள் நிறைந்துள்ளது.
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது, ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்லும். இதனால் நினைவாற்றல் கூடும். இதனால், உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது.
தோப்புக்கரணம் போடுவதால் என்னென்ன நன்மைகள்?
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது, ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்லும். இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதனால், உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது.
தோப்புகரணத்தில் காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை நாம் பிடித்து இழுப்பதால், மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கிறது.
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரித்து புதுவித சக்தியும் உற்சாகமும் ஏற்படுகின்றது.
இதுபோல வளரும் குழந்தைகள் தினமும் செய்துவந்தால் படிப்பு, எழுத்து, கணிதம் போன்றவற்றில் கவனம் அதிகமாகும். மேலும், உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும்.
தோப்புக்கரணம்போடுவதால், ஞாபக சக்தி கூடும். நீண்ட நாள் மன அழுத்தம்போகும், மனச்சோர்வு நீங்குவதோடு உடலின் கை கால்களின் தசைகள் வலிமையடையும். மேலும், ரத்த ஓட்டம் சீராகி மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.