வீட்டில் பாம்பு தொல்லை வர கூடாதா? இந்த ஒரு செடியை நட்டால் போதும்
உங்கள் வீடுகளில் அல்லது சுற்றுப்புற சூழல்களில் பாம்பின் தொல்லை அடிக்கடி இருந்தால் அதற்கு குறிப்பிட்ட ஒரு செடி வைப்பதன் மூலம் பாம்பின் வரவை இல்லாமல் செய்யலாம்.
பாம்பை விரட்டும் செடி
பாம்புகள் ஒரு விஷமுள்ள பிராணியாகும். இதன் காரணத்தினாலேயே மக்களுக்கு பாம்பு என்ற பெயரை கேட்டால் பயம் தெறிக்கவிடும். விட்டில் குழந்தைகள் பெரியவர்கள் இருந்தால் அங்கு பாம்பு தொல்லை வரக்கூடாது.
ஆனால் காட்டு பிரதேசங்களை அண்டி இருப்பவர்கள் வீட்டிற்கு கட்டாயம் பாம்பு வரும். இது தவிர வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அந்த வீட்டு தோட்டத்தில் உள்ள பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு பாம்புகள் வரும்.
இப்படி பல காரணங்கள் மூலம் பாம்புகள் வீடுகளுககுள் நுழைவதை தடுக்க நாம் ஒரு செடியை வைத்தால் போதும். அந்த செடியின் பெயர் தான் நாகதாளி.
இந்த செடி பார்ப்பதற்கு கொத்தமல்லி போல இருக்கும் சிறிய அளவில் தான் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும். இதில் இருந்து வரும் வாசனை பாம்பிற்கு பிடிக்காது.
இதன் காரணமாக காம்புகள் அடிக்கடி வராது என இதை பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். எனினும், இந்த பாம்பு விரட்டும் தாவரங்கள் ஒரு தற்காலிக தீர்வாகவோ அல்லது பாம்புகள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் ஒரு முறையாகவோ மட்டுமே கருதப்பட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |