குரு பெயர்ச்சி 2026: கடன் தீர்ந்து பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார் தெரியுமா?
குருபெயர்ச்சி இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள நிலையில், எந்தெந்த ராசியினருக்கு பணமழை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. குருபகவான் ஜுன் 2ம் தேதி கடக ராசிக்குள் நுழையும் நிலையில், சில ராசிக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு சுமார் ஒரு வருடம் எடுக்கும் நிலையில், தற்போது சொந்த ராசியான கடக ராசிக்குள் நுழைய உள்ளார்.
இதனால் பணவரவு, தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என எந்தெந்த ராசியினருக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்
மேஷ ராசியினர் இந்த குருபெயர்ச்சியில் நன்மையான பலனை அடையும் நிலையில், நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் குறைவதுடன், தொழிலில் எதிர்பாராத லாபமும் கிடைக்கும்.
கூட்டுத் தொழிலிலிருந்த கருத்து வேறுபாடு சரியாவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. மாணவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பினையும் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியினருக்கு குரு நேரடியாக வருவதால் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவம் அதிகரிக்கின்றது. வேலை செய்பவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு ஏற்படும். கூடுதலான பொறுப்புகளும் கிடைப்பதுடன், வருமானம் பல வழிகளில் அதிகரிக்கவும் செய்யும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு குரு 9ம் இடத்தில் பயணிப்பதால் அதிர்ஷ்டம் பலமடங்கு அதிகரிப்பதுடன், நீண்ட நாள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவிற்கு வரும்.
தொழிலில் புதிய வாய்ப்புகள், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வு மற்றும் குழந்தைகள் மூலமாக நல்ல செய்தியும் கிடைக்கும். ஆன்மீக பயணங் மற்றும் கோவில்களுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |