போன வாரம் தப்பித்து இந்த வாரத்தில் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர் இவரா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் 3-ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி கடந்த சீசன்களை போலவே அன்பு, மோதல், வாக்குவாதங்கள் என விறுவிறுப்பாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டுள்ளது.
இதையடுத்து, அன்றாடம் சண்டை சச்சரவுகள் தொடங்கிய நிலையில், அதற்கு முக்கிய காரணமாக அனைத்து ப்ரோமோகளிலுமே அபிஷேக் தான் இடம்பெறுகிறார்.
அவரை மற்றும் அடிக்கடி காட்டி வருகிறார்கள். இதனிடையே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் பட்டியலில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்னப் பொண்ணு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதில், அவர்களில் அபிஷேக், சின்னப் பொண்ணு மற்றும் அபினய் ஆகியோர் மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர்களில் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கடந்த வாரம் தான், நாடியா யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியேறி இருந்தார். அப்போதே சின்னபொண்ணு தான் வெளியேறுவார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வாரம் சின்னப்பொண்ணு வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.