நாங்க டிக்கட் எடுக்காம போவமுல்ல.... ரயிலில் சர்வ சாதாரணமாக பயணம் செய்யும் கால்நடைகள்! வைரல் வீடியோ
சீனாவில் ரயிலில் கால்நடைகள் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெற்கு சீனாவின் சிச்சுவான் (Sichuan ) மாகாணத்தில் ஒரு ரயில் மக்கள் பயணித்து கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சர்வசாதாரணமாக கால்நடைகள் வேகமாக ஏறி நடந்து செல்வதை காண முடிகிறது.
இந்த வினோத சம்பவம் பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ள சவுத் சீனா மார்னிங் போஸ்ட், இந்த காட்சிகள் ‘வறுமை ஒழிப்பு குறைந்த வேக ரயிலில்’ படம் பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த ரயில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புற நகரங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கிறது.
மேலும் ரயிலில் ஏறிய ஆடுகள் மற்றும் பன்றிகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளூர் விவசாயிகளால் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியான வீடியோவில் "இந்த பயணிகள் தங்கள் இருக்கைகளைத் தேடுகிறார்களா? "என்று கால்நடைகளை குறிப்பிட்டுள்ளனர்.ஏறக்குறைய 1.19 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ கிளிப்பில், கால்நடைகள் ட்ரெயின் கார்ஸ் (train cars)வழியே நடந்து செல்வதைக் காணலாம்.