வீட்டில் சுவாமிக்கு ஆரத்தி காட்டும் போது இந்த மந்திரத்தை மட்டும் சொல்லுங்க... அப்புறம் பாருங்க!
கடவுளுக்கு ஆரத்தி காட்டுவது என்பது பழங்காலமாக கடைப்பிடிப்படும் சம்ரதாயங்களில் ஒன்று. ஒரு நாளை நாம் தினமும் இறை வழிபட்டின் பின்பே தொடங்குகிறோம்.
அப்படி வழிபடுகையில் இறைவனுக்கு வீட்டில் கற்பூர ஆரத்தி எடுப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.
அப்படி ஆரத்தி எடுக்கையில் நாம் இறைவனுக்கான ஆரத்தி மந்திரம் அதை ஜபிப்பது நமது வேண்டுதலுக்கு மேலும் பலம் சேர்க்கும்.
அந்த வகையில் தினமும் ஆரத்தி எடுக்கையில் நாம் கூற வேண்டிய ஆரத்தி மந்திரம் இதோ.

பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரம்
ஓம் ராஜாதிராஜாய பிரசஹ்ய
சாஹினே நமோவயம் வைஸ்ரவனாய
குர்மஹே ஸமேகமான் காம காமாய மஹ்யம் !
காமேஸ்வரோ வைஸ்ரவனோத தாது !
குபேராய வைஸ்ரவனாய மகாராஜய நம
பொருள்
அரசனுக்கெல்லாம் அரசனான இறைவனே, அனைத்திலும் வெற்றியைத் தரும் சக்தி கொண்டவனே, பக்தர்கள் கேட்பதைக் கொடுக்கும் வல்லமை உடையவரே, குபேர மகாராஜனே உங்களைப் போற்றுகிறேன்.
மேலே உள்ள பஞ்ச கற்பூர ஆரத்தி மந்திரத்தை நாம் கூறுவதன் பயனாக நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் .
நாம் குபேர சம்பத்துகளுடன் நமது வீட்டில் பல காலம் வாழ இறைவன் அருள்புரிவார்.
இந்த ஆரத்தி மந்திரத்தை முடிந்தவரை தினமும் ஜபிப்பது நல்லது.
ஆரத்தி எடுக்கும் பழக்கம் எப்போது தோன்றியது..!
இறைவழிபாட்டின் போது ஆரத்தி எடுக்கும் பழக்கம் பழங்கால வேத அக்னி சடங்கில் இருந்து உருவானவையாகும்.
பெரும்பாலும் கோயில்களில் கடவுள் இருக்கும் கருவறையானது இருட்டாக இருப்பதால், எண்ணெய் விளக்கை ஏற்றி அந்த இடத்தில் ஒளி கொண்டு வருவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆரத்தி எடுக்கும் பழக்கம் வந்துள்ளது என முன்னோர்கள் சிலர் கூறுகின்றனர்.
பக்தர்கள் இறைவனை வழிபட கருவறைக்குள் நுழையும்போது இறைவனின் உருவம் தெளிவாக தெரிவதற்காகவும் அர்ச்சகர்கள் ஆராத்தி காட்டியுள்ளனர்.