பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை எப்போது? முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று விஜய் தன்னுடைய அஞ்சலியை உக்ஸ் தளத்தில் கூறி உள்ளார்.

முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று(10.06.2026) காலமானார்.
இதற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளார். அதில் “தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கு என தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் பாரதிராஜா.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பதம் ஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில், பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்”. இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் அடிப்படையில் பாரதிராஜா உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனவே முதல்வரின்
அறிவிப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை பாரதிராஜாவின் உடல் அரச மரியாதையுடன் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 10, 2026
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர்…
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |