வேலையை உதறிவிட்டு மாட்டுப்பண்ணை: கோடிகளில் கொட்டும் வருமானம்!! சாதித்த இளைஞரின் கதை
ஆந்திராவில் சிவில் இன்ஜினியரிங் வேலையை விட்டு விட்டு மாட்டுப்பண்ணை நடத்தி கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார் 26 வயதேயான Jayaguru Achar Hinder.
சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் Jayaguru Achar Hinder.
அந்த வேலையில் ஈடுபாடு இல்லாததால், தனியாக தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
சிறுவயதில் இருந்தே மாடுகளை பார்த்து வளர்த்து வந்த Jayaguru Achar Hinder-க்கு பெரிய அளவில் மாட்டுப்பண்ணை நடத்த திட்டமிட்டாராம்.
எனவே 2019ம் ஆண்டு தன்னுடைய வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார், தன்னுடைய பெற்றோருடன் இணைந்து கொண்டு புதுமையான தொழில்நுட்பங்களை புகுந்து மாட்டுப்பண்ணையை விரிவாக்கம் செய்துள்ளார்.

தற்போது இவரது பண்ணையில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் இருக்கின்றதாம், தினமும் 750 லிட்டர் பால், 30- 40 நெய்யை விற்பனை செய்து வருகிறார்.
இதுதவிர மாட்டின் சாணத்தை கிலோ கணக்கில் விற்று வருமானம் ஈட்டி வருகிறாராம், இதற்காக பஞ்சாபில் இருந்து பிரத்யேக கருவி ஒன்றை வீட்டில் பொருத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.
இதன்மூலம் மாதந்தோறும் 10 லட்சம் வரை வருமானம் வருகின்றதாம், இறந்த மாடுகளில் இருந்தும் வருமானத்தை ஈட்டி வருகிறார் Jayaguru Achar Hinder.

இறந்து போன மாடுகளை புதைக்காமல், ஒரு கொள்கலனில் போட்டு 6- 7 மாதங்கள் அப்படியே மூடுவிடுவார்களாம்.
அதில் மாட்டின் சிறுநீர், வெண்ணெய் உட்பட இன்னும் சில பொருட்களை சேர்த்து விடுவார்களாம்.
7 மாதங்களில் மாடு முழுவதுமாக மக்கிவிட, அதிலிருந்து வரும் திரவத்தை எடுத்து விற்பனை செய்துவிடுவாராம்.
இயற்கை உரமாக பயன்படும் இந்த திரவத்துக்கு அதிகளவில் வரவேற்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார் Jayaguru Achar Hinder.
