உயிர் போய்விடுமோ என்கிற பயம் இருந்தது.... ஆனால்! விவேக்கின் மரணத்தின் பிறகு உண்மையை உடைத்த வையாபுரி
விவேக் ஏன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று அவரின் நண்பரும், நடிகருமான வையாபுரி தெரிவித்துள்ளார்.
விவேக் மரக்கன்றுகள் நடுவதில் தீவிரம் காட்டிய நேரத்தில் தான் கொரோனாவின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியது.
தடுப்பூசி போட்டுக் கொண்டால் நல்லது என்று அரசு மக்களிடம் கூறியது.
ஆனால் தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. தடுப்பூசி போட்டால் உயிர் போய்விடுமோ என்கிற பயம் சிலருக்கு.
இதை எல்லாம் பார்த்த விவேக் தடுப்பூசி விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் விவேக்.
மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் தடுப்பூசி போட்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி தான் காரணம் என மக்கள் பேசத் துவங்கினார்கள்.
ஆனால் தடுப்பூசிக்கும், விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்தார்கள்.
விவேக் ஏன் தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்று நடிகர் வையாபுரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக இருக்கும் பயத்தையும் போக்கவே விவேக் தாமாக முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்றார்.
விவேக் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பி செய்த காரியம் வேறு மாதிரி ஆகிவிட்டது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.