போன ஜென்மத்து பந்தம் போல.... தெருவில் யாருமின்றி இருக்கும் நபரை தேடி தேடி வரும் நாய்!
தெருவில் ஆதரவற்று இருக்கும் ஏழை நபரிடம் தானாக சென்று பாசம் கொடுக்கும் நாய் ஒன்றின் காணொளி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நாய் ஒன்று வீடற்ற நிலையில் தெருவில் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துக் கொண்டே உள்ளது.
மனிதன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததால் நாய் அவனையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தது. சில வினாடிகளுக்குப் பிறகு, நாய் மனிதனுக்குத் தேவையான அணைப்பைக் கொடுத்தது.
This dog approaches a homeless man and seems to know what he needs.. ? pic.twitter.com/uGWL351fCR
— Buitengebieden (@buitengebieden_) December 30, 2021
அந்த மனிதன் நாயை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அன்பு செலுத்தினான்.
இறுதியில் மனிதரின் மடியில் அமர்ந்து கொண்ட நாய் அமைதியாக உட்கார்ந்து கொண்டது.
இதனை பார்த்த சிலர் போன ஜென்மத்து சொந்தமாக இருக்கும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.