2668 அடி மலை உயரம்.. திருவண்ணாமலை மகா தீபம் 2022 - நேரலை காட்சி
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளதை அடுத்து மக்கள் கடலாக காட்சியளிக்கும் திருவண்ணாமலை.
மாலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 27-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நேரலை காட்சிகள்
இதனை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
2,668 அடி உயரமுள்ள கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலையே மக்கள் வெள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதே திருவண்ணாமலையில் இருந்து நேரடி காட்சிகள் உங்கள் ஐபிசி தமிழ் யூடியூப் பக்கத்தில்