14 வருசம் வெளிநாட்டில் கஷ்டத்துடன் வேலை.. ஒரே நாளில் கூரையை பிய்த்துக்கொண்டு அடித்த அதிர்ஷ்டம்!
இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு லொட்டரியின் மூலம் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள தகவல் அவர் வாழ்க்கையே மாற்றியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஷாநவாஸ் என்ற நபருக்கு துபாயில் அடித்துள்ள அதிர்ஷ்டம் தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 கோடி பரிசு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாநவாஸ் 14 ஆண்டுகளாக துபாயில் வசித்து வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. துபாயில் உள்ள கார் வாடகை விடும் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்து ஒன்றரை ஆண்டுகளாக லொட்டரி வாங்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்படி சமீபத்தில் இவர் வாங்கிய லொட்டரிக்கு 10 மில்லியன் திர்ஹாம்கள் பரிசாக விழுந்துள்ளது.
ஷாநவாஸுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரும், ஒரே எண்களை பொருத்தியதால் அவர்கள் இருவருக்குமே இந்த 10 மில்லியன் பரிசை தலா 5 மில்லியன்களாக பிரித்து கொடுத்துள்ளனர்.
[
2 நாட்கள் தூங்கவில்லை
இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் ஆகும். இதுகுறித்து ஷாநவாஸ் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இதை நான் நம்பவில்லை.
இமெயில் வந்த பின் தான் உறுதியானது என முடிவு செய்தேன்.
வெற்றி பெற்ற உற்சாகம் இன்னும் மாறவில்லை.
இதனால் என்னால் இரண்டு நாட்கள் தூங்கவே முடியவில்லை. இதில் வென்ற பணத்தை முதலில் எனது கடனை அடைப்பேன்.
தொடர்ந்து, இந்தியாவை விட ஜக்கிய அரபு அமீரகத்தில் அதிக முதலீடு செய்ய விரும்புகிறேன் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
என்னதான் பெரிய அளவில் இவர் பணம் ஜெயித்தாலும், தொடர்ந்து துபாயில் வேலை செய்ய ஷாநவாஸ் முடிவு செய்துள்ளார்.