12 கிலோ எடை குறைத்த பிரபல இயக்குநர்! காரக்குழம்பு சாப்பிட்டா? கலாய்க்கும் ரசிகர்கள்
12 கிலோ எடை குறைத்தது எப்படி என்று பிரபல இயக்குநர் திரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் திரு
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர்தான் திரு. இதைத் தொடர்ந்து இவர் ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இவர் ‘குக் வித் கோமாளி’ சீசன் 2வில் கலந்து கொண்ட கனியைதான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கனி பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் சமையல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் கணவர் திரு எப்படி உடல் எடை குறைத்தார் என்பது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறுகையில்,
நான் 3 மாதத்தில் 76 கிலோவிலிருந்து 65 கிலோவுக்கு எடை குறைந்துள்ளேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அளவுக்கு எடை குறைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.
3 மாத கடின உழைப்புக்கு பிறகு பலன் கிடைத்திருக்கிறது. என்னால் அதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. நான் இப்போது முன்பை விட வலிமையாக உள்ளேன். உடற்பயிற்சி செய்ய கஷ்டப்பட்டேன்.
எனக்கு என் மனைவி கனியின் ஆதரவு கொடுத்தார். அவர் கொடுத்த ஊக்கம்தான் என்னை தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வைத்தது. இதிலிருந்து நான் மன தைரியம், மன உறுதி நிச்சயம் கிடைக்கும். உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களை சுற்றி நேர்மையான எண்ணம் கொண்டவர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான பதிவு இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |