சீரடியில் விஜய்யை நேரில் சந்தித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்
நடிகரும் தவெக தலைவருமான விஜயை எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ஆம் திகதி நடந்து முடிந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விஜய் சென்றிருந்தார். அதை தொடர்ந்து நேற்றைய தினம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.அங்கு விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள்.

நடிகை கனிகா
சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனிகா.
இப்படத்திற்கு பின்னர் படிப்பை முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படங்களை கூட தவிர்த்திருக்கின்றார். சிறிய இடைவேலைக்கு பின்னர் மீண்டும் சேரனின் ஆட்டோகிராப், அஜித்தின் வரலாறு போன்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றாரர்.

பின்னர் சினிமா பக்கமே காணவில்லை. 2008ம் ஆண்டு இவருக்கு ஷியாம் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.
நீண்ட காலத்திற்கு பின்னர் கனிகா சின்னத்திரையில் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி என்ற பெயரில் நடித்து வந்தார்.

எதிர்நீச்சல் சீரியலுக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இதன் முதல் பாகத்தை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடர்கிறது 2ம் பாகத்திலும் ஈஸ்வரியாக நடித்து வந்தார்.
கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அண்மையில் இந்த தொடரில் இருந்து கனிகா வெளியேறியிருந்தார்.அதற்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்றைய தினம் சீரடிக்கு சென்ற தளபதி விஜய்யை கனிகா சந்தித்துள்ளார். ஆம், சீரடி கோவிலுக்கு நடிகை கனிகா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அங்கு விஜய்யை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். குறித்த புகைப்படங்களை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |