இருமலை ஓட ஓட துரத்தும் சக்திவாய்ந்த திப்பிலி ரசம்...எப்படி செய்வது தெரியுமா?
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும்.
சக்தி வாய்ந்த மருத்துவ பொருளான திப்பிலியை கொண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- அரிசி திப்பிலி - 10
- கண்டதிப்பிலி - சிறிதளவு
- மிளகு - 10
- காய்ந்த மிளகாய் - ஒன்று
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்
- கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு
- எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடன் இதையெல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க...

செய்முறை
புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு - பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.