வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடன் இதையெல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க...
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொள்வதால் பலவிதமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.
உடலுக்கு நீர் சத்தை அளிக்கும் வெள்ளரிக்காயில், சாப்பிட்ட பிறகு சிலவற்றை உட்கொள்வதைத் நாம் தவிர்க்க வேண்டும்.
உட்கொள்ளக்கூடாதவை
வெள்ளரிக்காயை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது. வெள்ளரிக்காயில் அதிகளவில் நீர்சத்து இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெள்ளரிக்காயை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் இருமல் பிரச்சனையை ஏற்படுத்துவது மட்டுமின்றி வயிற்றில் பலவித கோளாறும்களும் ஏற்படும்.
வீட்டிலேயே நாவூறும் சிக்கன் கபாப் - செய்வது எப்படி?
அடுத்ததாக, வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே மோர் குடிக்கக் கூடாது. வெள்ளரிக்காய்க்கு மேல் மோர் உட்கொண்டால், அது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், சிறிது நேரம் கழித்தே மோர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே பால் குடிக்கக் கூடாது. ஏனென்றால், பால் மற்றும் வெள்ளரிக்காய் உட்கொள்வது சளி மற்றும் சூடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனால், காய்ச்சல், இருமல் அல்லது பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.