வெப்ப அலையிலிருந்து தப்பிக்க முடியவில்லையா? கட்டாயம் இதை செய்திடுங்க
இந்தியாவில் கடுமையான வெப்பம் நிலவிவரும் நிலையில், இதிலிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை வெப்பம்
கோடை காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், உடம்பில் 70 சதவீதம் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டுமாம்.
அவ்வாறு நீர்ச்சத்து இல்லையெனில் தலைவலி உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மூளையை அமைதியாகவும், குளிர்ச்சியாகவும் வைப்பதற்கு மிக முக்கியம் தண்ணீர் ஆகும்.
இந்நிலையில் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில் மருத்துவர்கள் சில ஆலோசனையை மக்களுக்கு கொடுத்துள்ளனர்.
இந்த வெப்ப அலையானது நீரிழப்பு, மயக்கம், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற பிரச்சனை கொடுக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

வெப்பத்தைத் தணிக்க என்ன செய்யலாம்?
உடம்பில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீர் பருக வேண்டும். மது, காபி மற்றும் சர்க்கரை கலந்து குளிர்பானம் இவற்றினை தவிர்த்து இளநீர், எலுமிச்சை ஜுஸ் இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் வெயில் உச்சத்தில் காணப்படும். அப்படி வெளியே செல்ல வேண்டும் என்றால் குடை, தொப்பி, சன்கிளாஸ் இவற்றினை பயன்படுத்தவும்.

ஆடையை தேர்வு செய்வதும் கோடை காலத்தில் மிக முக்கியம் ஆகும். அதாவது வெளிர் நிறத்தில், தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். ஏனெனில் இவை உடல் வெப்பத்தினை குறைக்க உதவுகின்றது.
தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஏனெனில் இவை செரிமானத்திற்கு மிக எளிதாக இருக்கும்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் இவர்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட காருக்குள் இவர்களை விட்டுச் செல்வது கூடாது.
தலைசுற்று, அதிகமான சோர்வு மற்றும் குமட்டல் போன்ற தொந்தரவு ஏற்பட்ட உடனே நிழலான இடத்திற்கு செல்வதுடன், உடனே மருத்துவரை பார்க்கவும் சென்றுவிடுங்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |