அதிக கடன் பிரச்சினையா? வெள்ளிழமையில் இந்த காரியங்கள் செய்தால் போதும்...
பொதுவாக ஒவ்வொரு வாரத்திலும் வரும் ஒவ்வொரு கிழமை நாளும் ஒரு கிரகங்களுக்குரியது. அப்படி பார்த்தால் செவ்வாய்க் கிழமையானது சுக்கிரன் பகவானுக்கு உரிய நாளாகும்.
இந்த நாளில் பொதுவாக எல்லோரும் நல்ல காரியங்களை செய்ய ஏற்ற நாள் என்பதால் பல நல்ல காரியங்கள் வெள்ளிக்கிழமையில் தொடங்குவார்கள். அந்தவகையில், பணக்கஷ்டம் தீர வெள்ளிக்கிழமைகளில் இந்த காரியங்களை செய்தால் அனைத்து கடன் தொல்லைகளும் தீர்ந்து விடும்.
பணக்கஷ்டம் தீர
வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பு வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். உப்பு மட்டுமல்ல தயிர், அரிசி, நல்லெண்ணெய் போன்ற பொருட்களை வாங்கினால் சுபமாகும்.
வெள்ளிக்கிழமையில் மொச்சை பயிரை சுக்கிர ஹோரரையில் வாங்கி வைத்தால் மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்து பணப்பிரச்சினைகளை தீர்த்து விடுவார்.
மேலும், சுக்கிர ஹோரையில் காலை வேளையிலும் மாலை வேளையிலும் மகாலட்சுமிக்கு மொச்சை பயிறு மற்றும் பச்சை பயிறு என்பவற்றில் சுண்டல் செய்து நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும்.
வெள்ளிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்தால் பணம் பெருகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |