தீபாவளி விளக்கு ஏற்றப்போறீங்களா? இதை மட்டும் செய்ய மறக்காதீங்க
இன்று தீபாவளி திருநாளில் விளக்கேற்றும் போது சில விஷயங்களை செய்ய மறக்க கூடாதுஇ இதை பற்றி பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளி விளக்கு
இன்று தீபாவளி எனும் சிறப்பான நாளுக்கு கட்டிப்பாக எல்லோரும் விளக்கேற்றுவார்கள். அப்படி விளக்கேற்றும் போது விளக்கிலிருந்து எண்ணெய் கசிந்தால், அது வீடு மற்றும் முற்றத்தில் எண்ணெய் கறைகளை எற்படுத்தும்.
இதற்கு விளக்கில் சில சிறப்பான விடயங்களை செய்ய வேண்டும். தீபாவளி என்பது தீபங்களின் திருவிழாவாகும், இது தீமையின் மீது நன்மையின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.
மக்கள் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பகிர்ந்து, குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து தீபம் ஏற்றுவது இதன் சிறப்புகளில் ஒன்று.
1.நீங்கள் கடைகளில் இருந்து மணி விளக்குகள் வாங்கி வந்தால் அதை 5 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.இவ்வாறு வைப்பதன் மூலம் விளக்கு எண்ணெயினை உறிஞ்சுவது தடுக்கப்படுகிறது.
2.தண்ணீரில் ஊற வைத்த மண் விளக்குகளை சுத்தமான பருத்தி துணி கொண்டு விளக்குகளை துடைக்க வேண்டும். விளக்குகளுக்கு வண்ணம் பூச வேண்டும் என்றால் அக்ரிலிக் பெயிண்ட்களைப் பயன்படுத்தலாம்.
இவை மண் விளக்கிலிருந்து எண்ணெய் கசியாமல் இருக்கும். நீங்கள் விரும்பும் எந்த நிறத்திலும் விளக்கினை வண்ணம் தீட்டி அலங்கரிக்கலாம். இது விளக்கினை மிகவும் அழகாக மாற்றும். அதோடு விளக்கில் இருந்து எண்ணெய் கசிவதையும் நிச்சயமாகத் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்க FOLLOW NOW |
