உடல் எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்கள் இரவில் இதையெல்லாம் செய்யவே கூடாது!
பொதுவாக எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு.
ஒவ்வொருநாளும் தினமும் கண்ணாடியைப் பார்க்கும் போது ஏன் இப்படி உடல் எடை ஏறிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்று அதிக கவலை வந்துக்கொண்டுதான் இருக்கும்.
இந்த உடல் எடையால் பலரின் கேலிக்கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்போம். சிலர் இந்த உடல் எடையைக் குறைப்பதற்கு பல பல வழிகளில் முயற்சித்து சோர்வடைந்திருப்பார்கள்.
ஆனால் அவர்கள் செய்யும் சில சில தவறுகளால் உடல் எடையைக் குறைக்க முடியாமல் போய் விடும். எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள் இந்த விடயங்களில் எல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இரவில் செய்யக் கூடாதவை
உடல் எடையை குறைக்க சங்கடப்படுபவர்கள் இரவு தூங்குவதற்கு முன் குளிர் பானங்களை அருந்தக் கூடாது ஏனெனில் இவற்றை அருந்தும் போது உங்கள் ஆரோக்கியம் கெடுவது மட்டுமல்லாமல் தொப்பையை அதிகரிக்கிறது.
தூங்கச் செல்வதற்கு முன்னர் அதிகமானோர் நல்ல சாப்பிட்டு விட்டு தூங்குவார்கள் அல்லது ஒரு சிலர் எதுவுமே சாப்பிடமாட்டார்கள். அப்படி எடையைக் குறைப்பவர்கள் இரவில் கனமான உணவுகளை சாப்பிடக் கூடாது ஏனெனில் இது உங்கள் உடலின் எடையை இன்னும் அதிகரிக்கும்.
பொதுவாகவே மது அருந்துவது உடலுக்கு தீங்கு என்பது எல்லோரும் தெரிந்ததே அப்படி உடல் எடை அதிகமாக இருந்து குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் பார்ட்டி எங்கும் சென்று மது அருந்தக் கூடாது ஏனெனில் உடலில் இருக்கும் மெட்டபாலிசம் ரேட் குறைந்து உடல் எடையை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |