வாழும் போதே வாழ்க்கையை நரகமாக்கும் 3 பழக்கங்கள்- உடனே மாத்திக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கியரின் கூற்றின்படி, வாழ்க்கைக்கு தேவையான சில விடயங்களை கடைபிடித்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை சமாளித்து மகிழ்ச்சியாக வாழலாம்.
அந்த வகையில், நெருப்பை விட ஒருவரை அதிகமாக காயப்படுத்தும் விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஒருவரை அதிகமாக காயப்படுத்தும் விடயங்கள்
1. ஒருவர் முதுமையில் மனைவி அல்லது கணவனை பிரிவது மிகவும் கொடுமையானது என சாணக்கியர் கூறுகிறார். ஏனெனின் முதுமையில் உங்களின் துணைப் போல் யாரும் உணர்ச்சி வசப்பட்டு கவனிக்கமாட்டார்கள். ஆதரவு இல்லாமல் போனால் அந்த உணர்வு மரணம் வரை சித்திரவதை செய்யும்.
2. இந்த உலகில் பிறந்த அனைவரும் தங்களின் குறைகளை பொருட்படுத்தாமல் தானாகவே வாழ முடியும். அதற்கு ஏற்றால் போல் உடல், ஆர்வம், அறிவு இருக்கின்றன. ஆனால் ஆரோக்கியமான நபர் இன்னொருவரைச் சார்ந்து வாழ வேண்டியிருந்தால், அதைவிட பெரிய துன்பமாக இருக்கும். இப்படியானவர்கள் தீராத துரதிர்ஷ்டத்தின் அடையாளம். பிரபஞ்ச ஆற்றல்கள் அவரை மரணத்திற்குப் பிறகு அழிவுக்குத் தள்ளுகின்றன என சாணக்கியர் கூறுகிறார்.
3. சாணக்கியரின் கூற்றுப்படி, கடின உழைப்பு மற்றும் முயற்சி இவை இரண்டும் காலப்போக்கில் நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சிலர் வெகுமதியின் பங்கை திருடுகிறார்கள். இப்படியானவர்கள் துரதிர்ஷ்டவாதிகளாக இருப்பார்கள். அத்துடன் ஒருவர் சம்பாதிக்கும் பணம் அவனது எதிரிகளின் கையில் வைத்தால் அது நினைத்து பார்க்க முடியாத அடியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |