ஆடி மாத பலன்கள்: இந்த 4 பொருட்களை திருமணம் முடித்த மகளுக்கு தவறியும் கொடுக்காதீங்க
பொதுவாக மகளை பெற்றவர்கள் தன்னுடைய மகள் நன்றாக வளர்ந்து நல்லதொரு ஆணுக்கு மனைவியாக சென்று, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பது தான் பெற்றோர்களின் பெரிய ஆசையாக இருக்கும்.
தனது மகளை திருமணம் செய்து கொடுத்த புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, மகள் கணவனுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான விடயங்களை பார்த்து பார்த்து செய்வார்கள்.
புதிதாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கும் இளைஞர்கள் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் பெரியவர்கள் கவனமாக இருப்பார்கள்.
அப்படி திருமணம் செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லும் பொழுது சில பொருட்களை மகளுக்கு கொடுத்து அனுப்பக் கூடாது என சாஸ்த்திரம் கூறுகிறது.
நாம் தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற சில கொண்டு செல்லக்கூடாத பொருட்களைக் கொடுத்து அனுப்புவதால் அமைதி குழையும் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், மகள் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது கொடுத்து அனுப்பக் கூடாத பொருட்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
மிளகாய்
- மகளுக்கு கொடுத்து அனுப்பக்கூடாத பொருட்கள் முதல் இடத்தில் இருப்பது மிளகாய் தான். புதிதாக திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கும் தம்பதிகளுக்கு இது மனக்கசப்பை ஏற்படுத்தும். அதே போன்று அவர்கள் சர்ச்சைகளில் சிக்கவும் வாய்ப்பு உள்ளது. மகள் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது உலர் பழங்கள் மற்றும் பழங்கள் கொடுத்து அனுப்பலாம்.
கேஸ் அடுப்பு
- சில பெற்றோர் பெண்ணுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பார்கள். அதில் கேஸ் அடுப்பும் கொடுப்பார்கள். ஆனால் புதுமண தம்பதிக்கு கேஸ் ஸ்டவ் வாங்கி கொடுத்து அனுப்பக் கூடாது. கணவருக்கு தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அடுப்புக்கு பதிலாக மகளுக்கு பிற வீட்டு உபயோக பொருட்களைக் கொடுக்கலாம்.
உப்பு
- மகள் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது உப்பு கொடுப்பது தவறு. உப்பு கொடுக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும் குடும்ப வாழ்க்கை பிரிந்து விடும். எப்போதும் கணவன்- மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்தால் உப்பு கொடுக்காதீர்கள். புகுந்த வீட்டில் மிகவும் இன்பமாக வாழ உப்பு போன்ற விஷயங்களுக்கு பதிலாக இனிமையான பொருட்களை வழங்கலாம். உப்புக்குப் பதிலாக இனிப்புகளைக் கொடுத்து வழியனுப்பலாம்.
ஊறுகாய்
- மகள் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது ஊறுகாய் கொடுத்து அனுப்புவது தவறு. இதனால் புதிய உறவில் புளிப்பைக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. மகளுக்கு பிடிக்கும் என தனியாக செய்து கொடுப்பார்கள். அதற்கு பதிலா இனிப்பு வகைகள் செய்து கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).