Beauty: முக அழகை கெடுக்கும் பழக்கங்கள்- இரவில் மட்டும் செய்யாதீங்க!
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முகம் அழகாக வைத்து கொள்ள அதிகமான ஆர்வம் காட்டுவார்கள்.
ஏனெனின் முகம் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதனை காட்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இரவு வேளைகளில் ஒரு சில தவறுகளை தொடர்ந்து செய்து வந்தால் நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் முகம் அழகாக இருக்காது என சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நினைப்பவர்கள் இரவில் செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இரவு வேளைகளில் செய்யும் தவறுகள்
1. சிலருக்கு இரவு நேர உணவை சாப்பிட்ட பின்னர் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படியானவர்கள் நிம்மதியாக இரவில் தூங்கமாட்டார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏனெனின் இரவு வேளைகளில் நாம் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் அருந்தும் காபியில் உள்ள காஃபின் தூக்கத்தைக் கெடுக்கும். இந்த பழக்கம் எடையை அதிகரிக்கும்.
2. தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இரவு நேரம் சாப்பிட்ட பின்னர் அதிகளவு தண்ணீர் குடித்தால் அது செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் எடையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
3. இரவு சாப்பிட்ட உடனே தூங்குவதும் நல்ல தல்ல. இந்த தவறை இன்றும் பலர் செய்து வருகிறார்கள். இரவு சாப்பிட்ட உணவு ஜீரணிக்க 10-15 நிமிட நடைப்பயிற்சி அவசியம். இதனை தவறும் பட்சத்தில் செரிமான கோளாறுகள், வாய்வு பிரச்சினை மற்றும் எடை அதிகரிப்பு ஏற்படலாம்.
4. உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடும் வழக்கமாக இருந்தால் அதனை கட்டுக்குள் வைப்பது நல்லது. ஏனெனின் இரவு வேளைகளில் இனிப்புக்கள் சாப்பிடும் ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது எடையை அதிகரிக்கச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |