கீரை சமைக்கும் போது இதை Follow பண்ணுங்க - ஆரோக்கியமும் சுவையும் கூடும்
பொதுவாக வீட்டில் எல்லா அம்மாக்களும் சமைக்கும் போது கீரை இல்லாமல் சமைக்க மாட்டார்கள். அப்படி சமைக்கும் கீரையை எப்படி சமைத்தால் கீரையில் உள்ள சத்துக்கள் கிடைக்கும் ஆரோக்கியம் வரும் முக்கியமாக சுவை இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு வகைகளில் கீரைக்கு முக்கிய இடம் இருக்கிறது.
இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி, கே, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் ஆகியவை இயற்கையாகவே கீரையில் உள்ளன. எனவே கீரை சமைக்கும் போது எதை போரோவ் பண்ண வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கீரையை சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை
ஒரு கப் கீரையில் சுமார் 2.7 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது. இது ஒரு நபருக்கான ஒரு நாள் இரும்புச் சத்து தேவையில் சுமார் 15 சதவீதம் ஆகும்.
கீரை "நான்-ஹீம் இரும்பு" (Non-heme iron) வகையை சேர்ந்தது ஆகும். அசைவ உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை போன்று, இதனால் உடலில் எளிதாக உறிந்து கொள்ள முடியாது.
இதனால் கீரையிலுள்ள முழு சத்துகளும் உடலுக்கு கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட சில வகையான உணவு பொருட்களுடன் கீரையை சேர்த்து சமைப்பதன் மூலம் அதன் சத்துகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
வைட்டமின் சி - கீரையில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிந்து கொள்வதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த வழி.
ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கீரையில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சும் அளவை கணிசமாக அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக, கீரை சாலட்டில் ஒரு சில துளி எலுமிச்சை சாறை சேர்ப்பது அதன் சுவையை அதிகரிப்பதுடன், அதன் இரும்புச் சத்து முழுமையாக நமக்கு கிடைக்க உதவும்.
ஆரோக்கியமான கொழுப்பு - கீரையை ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்த்து உண்ணலாம். கீரை, கரோட்டினாய்டுகள் நிறைந்தது. மேலும், இந்த ஊட்டச்சத்துகள் கொழுப்புகளுடன் இணையும்போது சிறப்பாக செயல்படுகின்றன.
உங்கள் சாலட் அல்லது பொரியல் உணவுகளில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உணவுக்கு சுவையை சேர்ப்பதுடன், வைட்டமின் ஏ மற்றும் கே போன்ற கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் - உங்கள் இரும்புச் சத்து உட்கொள்ளலை அதிகரிக்க, கீரையை மற்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
பருப்பு வகைகள், பயிறுகள், கொண்டைக்கடலை, பாதாம் போன்ற சத்தான உணவுகளுடன் கீரையை சேர்த்துக் கொள்ளும்போது இரும்புச் சத்துக்கான கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
உதாரணமாக, கொண்டைக்கடலை மற்றும் கீரை கலந்த பொரியல் வகை ஆகியவற்றை சமைக்கலாம். இது சுவையாக இருப்பதுடன் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |