இனிப்பான நல்ல தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்குவது?
கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த தர்பூசணி பழத்தை நல்லதாகவும் இனிப்பாகவும் பார்த்து வாங்குவது அவசியம்.

தர்பூசணி
கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்க எல்லோரும் தர்பூசணியை சாப்பிடுவார்கள். அதிலும் இனிப்பான தர்பூசணியைச் சாப்பிடுவது ஒரு தனிச் சிறப்பு.
ஆனால் கடைகளில் பழத்தை அப்படியே வெட்டாமல் வாங்கும் போது எப்படி அது இனிப்பா இல்லையா என்பதை எப்படி பார்த்து வாங்குவது என்பது உல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.
அதன்படி ஒரு தர்பூசணியின் காம்பைப் பார்த்தே அது இனிப்பானதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி, உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இனிப்பான தர்பூசணியை அடையாளம் காண்பதில் சிரமப்படுகிறீர்களா? அப்போ பதிவை படித்து அதற்கான டிப்ஸ் ஐ தெரிந்து கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டிய விடயங்கள்!
தர்பூசணி வாங்கும் போது, அதன் காம்புப் பகுதியைக் கவனியுங்கள்.
காம்புப் பகுதியில் மஞ்சள் நிறம் தென்பட்டால், தர்பூசணி உள்ளே பழுத்துவிட்டது என்று அர்த்தம். இந்த வகை தர்பூசணியை வாங்கினால் அது அதிக இனிப்பாகவும், சாறு நிறைந்ததாகவும், சிவப்பாகவும் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம்.

தர்பூசணியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையால் அதைத் தட்டிப் பாருங்கள். நீங்கள் தட்டும்போது ஆழமான, எதிரொலிக்கும் சத்தம் கேட்டால், அதன் உள்ளே இனிப்பாக இருக்கிறது என்று அர்த்தம்.
இனிப்பான தர்பூசணியை முகர்ந்து பார்த்தும் நீங்கள் கண்டறியலாம். மஞ்சள் திட்டுகள் உள்ள தர்பூசணி இனிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கோடை காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது நன்மை தரும். ஏனெனில் இது நீர்ச்சத்து இழப்பு அபாயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், வெப்பத்தாக்கத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி, குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை தரும் என்று கருதப்படுகிறது. உங்கள் உடல் எடையைக் குறைக்கவும் இந்த படத்தை சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |