திருடிய பொருட்களை எடுத்துச் செல்ல திருடர்கள் செய்த காரியம்! இறுதியில் அரங்கேறிய ட்விஸ்ட்
அமெரிக்காவில் வீடு ஒன்றில் உள்ள பொருட்களை திருடிய திருடர்கள், அதனை எடுத்துச் செல்வதற்கு காவல்துறையினரின் உதவியை நாடியுள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருடர்கள் செய்த வினோதம்
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் காவல்துறையினருக்கு அழைப்பு ஒன்று வந்த நிலையில், எதிர்பக்கம் இருந்து பேசியவர்கள் பதில் எதுவும் தெரிவிக்காமல் சந்தேகப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த வீட்டினை அவதானித்துள்ளனர்.
அப்பொழுது வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருப்பதுடன், உள்ளே Roldan மற்றும் Oscasio என்ற கணவன் மனைவி இருவர் மறைந்து இருப்பதையும் அவதானித்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு நியூயார்க்கில் இருக்கும் தனது வீட்டில் சேர்க்கவும், பின்பு தங்களது விடுமுறையை கழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனால் விமான நிலையத்திற்கு போன் செய்வதற்கு பதிலாக காவல்நிலையத்திற்கு போன் செய்தது தெரியவந்துள்ள நிலையில், வசமாக சிக்கியுள்ளனர்.
பொதுவாக திருடர்கள் திருடிய பின்பு சில தினங்களுக்கு, பின்பு காவல்துறையினரிடம் சிக்கும் நிலையில், குறித்த தம்பதிகள் திருடிய உடனே சிக்கியுள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.