ரகசியத்தை காப்பாற்றுவதில் கில்லாடியான ராசிகள் யார் யார்னு தெரியுமா?
ரகசியத்தை காப்பாற்றுவதில் கில்லாடியாக இருக்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைக்கும் ரகசியத்தினை ஒருவரிடம் சட்டென்று கூறிவிட்டால், அது அடுத்தடுத்து மற்ற நபர்களுக்கும் சென்றுவிடும்.
ஏனெனில் பெரும்பாலான மனிதர்களின் குணம் ரகசியத்தை பாதுகாக்க முடியாமல் மற்றவர்களிடம் கூறிவிடுவது தான். ஆனால் சில ராசியினர் ரகசியத்தினை காப்பாற்றுவார்களாம்.
அந்த வகையில் மரணித்தாலும் ரகசியத்தை காப்பாற்றும் ராசிகள் யார் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இவர்களிடம் தைரியமாக உங்களது ரகசியத்தினை கூறலாம்.

விருச்சிகம்
ரகசியத்தினைக் காப்பாற்றுவதில் விருச்சிக ராசியினரை அடித்துக் கொள்ளவே முடியாதாம். இவர்களிடம் ஒரு விடயத்தினைக் கூறினால் மரணம் வரை கூட வெளியே கூறிவிட மாட்டார்களாம். அதாவது இவர்களுக்கே தெரியாமல் இவர்களிடம் பல ரகசியங்கள் தூங்கிக் கொண்டிருக்குமாம். இந்த ராசியினரை மனித லாக்கர் என்றே கூறலாம்.

மகரம்
மகர ராசியினர்களும் உணர்ச்சிவசப்பட்டு பேசி ரகசியங்களை உளறுபவர்கள் அல்ல. ஒருமுறை வெளியே சொல்ல மாட்டேன் என்று வாக்கு கொடுத்தால், உலகமே அழிந்தாலும் அதனை யாரிடமும் கூற மாட்டார்களாம். இவர்களின் மௌனம் தான் இவர்களின் மிகப்பெரிய பலன் ஆகும்.

கடகம்
கடக ராசியினரிடம் நீங்கள் ரகசியத்தினை கூறினால், உங்களது பாசத்திற்கும், உணர்விற்கும் மதிப்பளித்து கடைசிவரை காப்பாற்றுவார்களாம். அதாவது உங்களை காயப்படுத்தக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். மேலும் உங்களது ரகசியத்தினை தனது சொந்த ரகசியம் போன்று பாதுகாப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் இயற்கையிலேயே சற்று பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பதுடன், இவர்களை வற்புறுத்தி மற்றவர்கள் இப்படி சொன்னார்கள் என்று மறைந்திருக்கும் ரகசியத்தினைக் கேட்டால் இன்னும் பிடிவாதகமாகவே இருப்பார்கள். ஒரு வார்த்தை கூட இவர்களிடம் இருந்து வாங்க முடியாதாம். ஆதலால் இவர்களிடமும் உங்களது ரகசியம் பாதுகாக்கப்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். ஒரு ரகசியத்தை வெளியில் சொன்னால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணக்குப் போட்டு விடுவார்கள். அந்தப் பிரச்சனை தேவையில்லை என்று நினைத்து, அந்த ரகசியத்தை மூளைக்குள் ஒரு தனி போல்டர் போட்டு லாக் செய்துவிடுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |