மாம்பழம் சாப்பிட்ட உடன் சாப்பிடக்கூடாத உணவுகள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
மாம்பழம் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாம்பழம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாம்பழ சீசனில் மட்டும் தான் மாம்பழத்தினை சாப்பிட முடிகின்றது.
மற்ற நாட்களில் மாம்பழம் அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. மாம்பழ சீசனின் போது ஊறுகாய், இனிப்பு பச்சடி, ஜாம், ஜுஸ் என பல வகைகளில் செய்து சேமித்து வைத்துவிடுகின்றனர்.
ஆனால் உடலுக்கு ஆரோக்கியமாக இருந்தாலும் மாம்பழத்தினை சாப்பிட்ட உடன் சில உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.

எந்தெந்த உணவினை தவிர்க்க வேண்டும்?
மாம்பழம் தயிர் இவற்றினை ஒன்றாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழம் உடலுக்கு உஷ்ணத்தையும், தயிர் குளிர்ச்சியையும் அளிக்கின்றது என்பதால் இவை செரிமான பிரச்சனை, வாயு தொல்லை மற்றும் தோல் அலர்ஜி இவற்றினை ஏற்படுத்தும்.
காரமான உணவுகளை மாம்பழம் சாப்பிட்ட உடன் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை உடலின் வெப்பத்தினை அதிகரிப்பதுடன், நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிறு வலி பிரச்சனையை ஏற்படுத்தும்.

மாம்பழம் சாப்பிட்ட உடன் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இரண்டிலும் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சட்டென அதிகரித்துவிடும். மேலும் வயிறு உப்புசத்தையும் ஏற்படுத்தும்.
மாம்பழத்துடன் கசப்பான காயான பாகற்காய் சாப்பிடக்கூடாது. இவை வாந்தி, கடுமையான வயிறு வலி, அஜீரணக் கோளாறு இவற்றினை ஏற்படுத்தும்.

மாம்பழத்துடன், ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் உடலில் பி.எச் சமநிலையை மாற்றிவிடுவதுடன், செரிமான கோளாறையும் ஏற்படுத்தும்.
மாம்பழம் சாப்பிட்டதம் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் நீர்ச்சத்து அதிகமாவதுடன், வயிற்று போக்கு, செரிமான குறைபாடு ஏற்படும். ஆகவே 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கவும்.

மாம்பழம் சாப்பிட்ட உடன் வறுத்த மற்றும் கொழுப்பு நிறைந்த இறைச்சி, நொறுக்கு தீனி இவற்றினை சாப்பிடுவதை தவிர்க்கவும். செரிமானம் ஆவதற்கு நேரம் எடுப்பதுடன், வயிறு நிரம்பிய உணர்வையும் கொடுக்கின்றது.
அதே போன்று பால் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். இவை அதிகளவு லாக்டிக் அசிட் உள்ள நிலையில், நமது செரிமான பிரச்சனை பாதித்து, வயிறு உப்புசத்தையும் ஏற்படுத்துகின்றது. ஒருமணி நேரம் கழித்து பால் பொருட்களை சாப்பிடலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |