இந்த 5 ராசியிடமும் மிகவும் ஜாக்கிரதையா இருக்கணுமாம்....பிடிவாதத்தால் ஆட்டிப்படைப்பார்கள்! உஷார்
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் ஒருவரை போல மற்றொருவர் இருப்பதில்லை.
இது இயற்க்கை. சிலர் மிகவும் பிடிவாதமாகவும், கோப குணமுடையவராகவும் இருக்கலாம்.
அவர்களுக்கு எவ்வளவுதான் புரிய வைக்க முயற்சித்தாலும், இப்படிப்பட்டவர்கள் தவறு செய்தாலும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து அவர்கள் அசைய மாட்டார்கள்.

இத்தகைய குணமுடையவர்களிடம் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் பிடிவாதமாக இருக்கும் ராசி அறிகுறிகள் பற்றி காணலாம்.
மேஷம்
மேஷ ராசி நேயர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள். யார் சொல்வதையும் எதையும் கேட்கவே மாட்டார்கள். மற்றவர்கள் காயப்படுத்தினாலும் இந்த ராசிக்காரர்கள் பின்வாங்க மாட்டார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். யாராலும் அவர்களை நம்ப வைக்க முடியாது. இது சில சமயங்களில் எதிர்மறையான பண்பாக இருந்தாலும், அது அவர்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களிடம் யாரேனும் அறிவுரை வழங்க முயற்சிக்கும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சூழ்நிலைகள் தெரிந்தாலும் கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். யாரும் கன்னி ராசிக்காரருடன் இருக்க விரும்பாததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்போது தவறு செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஆனால் இறுதிவரை சண்டையிடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர்கள் என்பதால், அவர்கள் தங்கள் உள்ளுணர்வை மட்டுமே நம்பக் கற்றுக்கொண்டனர்.
அதனால் மற்றவர்கள் புரிய வைக்க முயற்சிப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
கும்பம்
கும்ப ராசி நேயர்கள் அவர்களின் கருத்துக்களை மட்டுமே எப்போதும் முன்வைப்பார்கள். அவர்கள் செய்வது எப்போதும் சிறந்த வழி என்று இந்த ராசிக்காரர்கள் நினைக்கிறார்கள். கும்ப ராசிக்காரர்கள் தலைசிறந்தவர்கள் மற்றும் மற்றவர்களின் தாக்கத்திற்கு அடிபணிய மாட்டார்கள்.