சுக்கிரன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்
சுக்கிரன் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நேர்மறையான கிரகங்களில் ஒருவராக இருப்பவர் தான் சுக்கிரன்.
அழகு, காதல், ஆடம்பரம், நிதி இவற்றிற்கான கிரகமாக இருக்கும் சுக்கிரன் நீர் ராசியான கடக ராசிக்கு நுழைகின்றார்.
ஜுன் 13ம் தேதி வரை அதே ராசியில் நிலைத்திருக்கும் நிலையில், இந்த காலக்கட்டத்தில் சில ராசியினருக்கு நன்மையை அளிக்கின்றார்.
அந்த வகையில் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினர் யார் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியினால் மகிழ்ச்சியாக காலமாக இருப்பதுடன், நிதி நிலையில் மாற்றம் ஏற்படும்.
எதிர்பார்த்ததை விட அதிக வருமானத்தினை பெறுவீர்கள். வியாபாரிகளும் இந்த காலத்தில் நல்ல லாபத்தினை பெறலாம். சுயமாக சம்பாதிப்பவர்களுக்கு பல வழிகள் பிறக்கும்.
சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலக்கட்டமாகும். புதிய வேலை தேடுபவர்களின் வளர்ச்சியும் அசாதாரணமாகதாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியினரும் இந்த காலத்தில் சிறப்பாக பலனை அடைவதுடன், தொழிலில் மகத்தான வெற்றியை அடைவதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.
மேலும் இந்த சுக்கிரன் பெயர்ச்சியினால் வருமானம் அதிகரிப்பதுடன், சமூக உறவு வலுவடையவும் செய்கின்றது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
கன்னி ராசியினரின் ஆரோக்கியம் அவர்களின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாகவே இருக்குமாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரின் வெற்றியினை உறுதி செய்யும் காலமாக இந்த சுக்கிர பெயர்ச்சி இருக்குமாம். சிறப்பான நன்மையினை அடைவதுடன், சமூக மற்றும் குடும்ப சூழலில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், தொழில் ரீதியாக அதிக பயணம் மேற்கொள்ளும் நிலையும் காணப்படும்.
சொந்தமாக தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியுமாம். நிதி ரீதியாக அதிக செழிப்புடன் காணப்படும் நிலையில், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதியும் நிறைந்திருக்கும்.

மகரம்
மகர ராசியினர் இந்த சுக்கிரன பெயர்ச்சியினால் தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தினை அனுபவிக்க உள்ளனர்.
சரியான முயற்சியினால் வெற்றியடைவதுடன், மேலதிகாரிகளிடமிருந்து நேர்மறையான ஆதரவு மற்றும் கடின முயற்சியினால் அங்கீரகாரம் கிடைக்கும்.
பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பல்வேறு பணிகளை வெற்றிகரமாக செய்வதில் உற்சாகமாக இருக்கவும் செய்வார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |