புதனால் உருவாகும் பத்ரா ராஜயோகம்.... அதிர்ஷ்டத்தினை தட்டித்தூக்கும் 4 ராசியினர்
புதன் மிதுன ராசிக்குள் நுழைவதால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தினால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பத்ரா ராஜயோகம்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் இவற்றிற்கு காரணமாக இருக்கின்றார்.
மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக இருக்கும் நிலையில், புதன் சந்திரனுக்கு அடுத்ததாக குறுகிய நாட்களில் ராசியினை மாற்றுகின்றார்.
புதன் தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் நிலையில் மே 29ம் தேதி தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ள நிலையில் அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினரின் முதல் வீட்டிற்கு புதன் சென்று குறித்த ராஜயோகம் உருவாகும் நிலையில், பணியிடத்தில் வேலைக்கான பாராட்டை பெறுவாரக்கள்.
பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும், வணிகத்தில் நல்ல லாபத்தினையும், பெரிய ஒப்பந்தங்களையும் பெறுவவார்கள். புதிய நிதி ஆதாயங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலம் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

கன்னி
கன்னி ராசியின் 10வது வீட்டில் புதன் செல்வதால் பத்ரா ராஜயோகத்தினால், வியாபாரத்தினை விரிவாக்கும் வாய்ப்பினை பெறுவார்கள்.
தொழில் ரீதியாக வளர்ச்சியை காண்பதுடன், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மதிப்பு, மரியாதையும் அதிகரிக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், பரம்பரை சொத்துக்களால் நிதி ஆதாயம் கிடைக்குமாம்.

தனுசு
தனுசு ராசியின் 7வது வீட்டில் குறித்த ராஜயோகம் இருப்பதால், வாழ்க்கைத் துணையுடன் இருந்த மனக்கசப்பு நீங்குவதுடன், உறவு வலுவடையும்.
கூட்டு தொழில் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் நிலையில், எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் பெரிய திட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்
மீன ராசியில் 4வது வீட்டில் புதன் வருவதால் குறித்த ராஜயோகத்தினால், புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ள நிலையில், குடும்பத்தினருடனான உறவும் மேம்படுகின்றது. குடும்பத்தில் முழு ஆதரவு கிடைப்பதுடன், பணியிடத்தில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |