அனிருத் திருமண அழைப்பிதழ்... திருமணம் எப்போது தெரியுமா?
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
அனிருத் காவ்யா
இசையமைப்பாளராக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகளும், SRK அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை திருமணம் செய்ய போவதாக சில மாதங்களாக செய்திகள் வெளியாகியது.
இவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குட்டி பத்மினி மற்றும் YG மகேந்திரன் பேட்டி ஒன்றிலும் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட விடயத்தினை உறுதிபடுத்தும் விதமாக அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண பத்திரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
[
முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வைப்பதற்கு கலாநிதி மாறன், அவரது மனைவி மற்றும் அனிருத் என மூவர் சென்றுள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு நவம்பர் மாதம் 21ம் தேதி நடைபெறுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |