இந்த ராசிக்காரர்கள் இந்த ருத்ராட்சம் தான் அணிய வேண்டுமாம்...
எந்த ராசிக்காரர்கள் எந்த ருத்ராட்சம் அணியலாம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ருத்ராட்சம்
ருத்ராட்சம் என்பது சிவபெருமானின் கண்களில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது.மேலும் இது ஒரு மூலிகை மரமாகவும் கருதப்படுகிறது.
இது அணிவதால் நமக்கு மன மற்றும் உடல் நலம் நமக்கு சீராக இருக்கும்,இதை ஆண்கள், பெண்கள்,சிறியோர்,பெரியோர் என அனைவரும் அனியக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளே முகம் என்று சொல்லப்படுகிறது.ஐந்து கோடு என்றால் ஐந்து முகம் என்று அர்த்தமாம்.ஒவ்வொரு ருத்தராட்சமும் ஒவ்வொரு பயன்களை கொண்டது.
மேஷம்
மேஷம் ராசிக்காரா்கள் ஒரு கோடு அதாவது ஒரு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது சிறந்ததாக கருதப்படுகிறது.இதை அணிவதன் மூலம் அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை அவர்கள் அடைவார்களாம்.மேலும் அவர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நான்கு அல்லத ஆறு முகம் கொண்ட ருத்ராட்சம் நல்லது, ஏனென்றால் இது அவர்களுக்கு வெற்றி, அதிர்ஷ்டம் ,செல்வம் என பல நன்மைகள் தரும்.இதை தவிர அவர்களுக்கு மன அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் சிறந்தது.இதை அவர்கள் அணிவது மூலம் அவர்கள் வாழ்வில் உள்ள தடைகள் நீங்க உதவுகிறது.மேலும் செல்வம்,பதவி, புகழ் போன்றவற்றை தரும்.
தனுசு
இந்த ராசிக்காரர்களுக்கு ஒன்று,மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் நல்லது.ஏனென்றால் இது அவர்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை, வெற்றி ஆகியவற்றை தருகிறது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் நான்கு ஆறு அல்லது பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் அணிய வேண்டும்.அது அவர்களுக்கு சிவபெருமானின் அருளை கொடுக்கிறது.இது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் மூன்று அல்லது ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவது நல்லது.இது அவர்களுக்கு அமைதி மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.இது அவர்களுக்கு தொழில், வியாபரம், கல்வி ஆகியவற்றில் வெற்றி கிடைக்க உதவுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |