இந்த பொருட்களை மறந்தும் மற்றவர்களுக்கு கொடுக்காதீங்க... தரித்திரத்தை ஏற்படுத்தும் ஜாக்கிரதை
நாம் சில பொருட்களை கடனாகவோ, தானமாகவோ கொடுத்தால் அது நமக்கு கண்டிப்பாக தரித்திரத்தை கொடுக்கும். எந்த பொருட்களை தானமாக கொடுக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அடுத்தவர்களிடம் கடன் கொடுக்கக் கூடாத பொருட்கள்
துடைப்பத்தில் மகாலெட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை உள்ளது. அதனால் இந்த துடைப்பத்தை கண்டிப்பான முறையில் பக்கத்து வீட்டினர்களுக்கு தானமாகவோ, கடனாகவோ கொடுக்கக்கூடாது.
உப்பை கடனாகவோ தானமாகவோ யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதே போல் நாமும் உப்பை தானமாக யாரிடமும் வாங்கக்கூடாது.
வஸ்திர தானம் என்பது மிகவும் நல்லது. ஆயுளை நீட்டிக்கும். பெரிய புண்ணியத்தை சேர்க்கும். ஆனால் கண்டிப்பாக நாம் நீண்ட நாட்கள் பயன்படுத்திய துணிகளை தானமாக கொடுக்கக்கூடாது.
நம் வீட்டில் பயன்படுத்திய விளக்கை நாம் யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது. அதே சமயம் புதிதாக விளக்கை வாங்கி நாம் பரிசாக அளிப்பதில் தவறு இல்லை.
நாம் வீட்டில் பயன்படுத்தும் கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், அரிவாள், அரிவாள்மனை, ஊசி இவற்றினை கடனாகவோ, தானமாகவே கொடுக்கக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |