இந்த ஒரே ஒரு உணவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது விஷம் சாப்பிடுவதற்கு சமமாம்! பேராபத்து... எச்சரிக்கை!
ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு நாம் உண்பது (ஏறக்குறைய 10 மணி நேரம்) காலை உணவுதான்.
அதனால்தான் அதை ‘பிரேக்-பாஸ்ட்’ என்று அழைக்கின்றனர்.
அதாவது நீண்ட விரதத்தை உடைப்பது என்று அர்த்தம்.

பாரம்பரியமாக நமது வீடுகளில் செய்யப்படும் உப்புமா, இட்லி, பொங்கல் போன்ற காலை உணவுக்கு ஈடு இணையே இல்லை. இதன் தயாரிப்பிலும் சாப்பிடும் முறையிலும் சமச்சீரான சத்துகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லதல்ல. ஆனால் நாம் ஆரோக்கியம் என்று எண்ண சாப்பிடும் சில உணவு ஆபத்தை ஏற்படுத்த கூடியது. அப்படி நாம் சாப்பிடக்கூடாத உணவுகளில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
கிழங்கு வகையைச் சேர்ந்தது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
இது அற்புதமான இனிப்புச் சுவையைக் கொண்ட ஒரு குளிர்கால காய்கறி.
இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் என்ன தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இதில் உள்ள டானின்கள் மற்றும் பெக்டின், வாய்வுத் தொல்லை, அமில சுரப்பு மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை உண்டாக்கும். சில சமயம் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
ஆகவே, சர்க்கரைவள்ளிக் கிழங்கை காலை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.