Chanakya: கணவர் வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதைகளாக மாறும் மனைவி- அப்படி என்ன செய்வார்கள்?
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அறிஞர்களில் இராஜதந்திரியாக இருந்தவர் தான் சாணக்கியர்.
இவரின் கொள்ளைகள் எப்போதும் மனித வாழ்க்கையுடன் தொடர்புப்பட்டதாக இருக்கும்.
இந்த கொள்கைகளை தொகுத்து சாணக்கிய நீதி என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. அந்த நூலில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்களை மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதனாக பிறந்த ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்த தேவையான மதம், தர்மம், கர்மம், பாவம் மற்றும் புண்ணியங்கள் என்பவற்றை அவர் மொழி நடையில் கூறியுள்ளார்.
அந்த வகையில் மனிதர்களாக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்போம். அதற்கான வழியை சாணக்கியர் ஆயத்தப்படுத்தப்படுத்தி கொடுத்துள்ளார்.
சாணக்கிய கொள்கைப்படி, வாழ்க்கையில் வெற்றிப் பெற நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில குணங்கள் உள்ள பெண்களை திருமணம் செய்ய வேண்டும். அப்படியாயின் தேவதைகளாக திகழும் பெண்களிடம் இருக்கும் குணங்கள் எப்படி இருக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அதிர்ஷ்ட தேவதைகளாக திகழும் பெண்கள்
1. அமைதியான குணம் கொண்ட பெண்கள் லட்சுமியின் வடிவமாக பார்க்கப்படுகிறார்கள். இவர்களிடம் இருக்கும் அமைதியான குணம் ஒரு ஆணுக்கு மனைவியாக கிடைத்து விட்டால் வீட்டை அழகுபடுத்தி விடுவார். குடும்பத்திலும் பிரச்சினைகள் வராது. மாறாக குடும்பம் மிக வேகமாக முன்னேறும். கோபம், சண்டை சச்சரவுகள் போன்ற வீட்டின் அமைதியைக் கெடுக்கும் விஷயங்களுக்கு இடமே இருக்காது.
2. படித்த, நல்லொழுக்கமுள்ள மற்றும் பண்புடன் இருக்கும் பெண்கள் கிடைப்பது வரம் என சாணக்கியர் கூறுகிறார். ஆணின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருக்கும் பெண்கள் படித்த பெண்களாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அத்தகைய பெண்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். எந்தவித முடிவையும் நொடிகளில் எடுக்கலாம்.
3. மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடிய ஒரு பெண் கிடைத்த அது இறைவன் கொடுத்த பரிசாக பார்க்கப்படுகின்றது. ஆண்களின் மகிழ்ச்சிக்கு மென்மை மிக முக்கியம். அத்தகைய பெண்களை மணந்தால் சமூகத்தில் கணவருக்கு தனி மரியாதை கிடைக்கும். அதே சமயம் திருமணமாகி வரும் வீட்டிற்கு கௌரவம் அதிகரிக்கும்.
4. சாணக்கியரின் கூற்றுப்படி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்கள் ஆசைகளை மாற்றும் பெண்கள் சிறந்த மனைவிகளாக இருப்பார்களாம். கணவர், குடும்பம், குழந்தைகளுக்காக இவர்கள் தங்களின் ஆசைகளை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். குடும்பம் ஒருபோதும் நிதி நெருக்கடியில் சிக்குவதில்லை. மாறாக இவர்கள் பட்ஜெட்டில் குடும்பம் நடத்துவார்கள்.
5. சகிப்புத்தன்மை பெண்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அமைதியுடன் இருக்கும் பெண்கள் நிறைய விடயங்களை கணவருக்காக சகித்துக் கொள்வார்கள். அத்தகைய மனைவியின் ஆதரவும், ஊக்கமும் அவருடைய கணவரை எந்த சிரமங்களிலிருந்தும் காப்பாற்றும்.
6. சாணக்கிய நீதிபடி, பணத்தை சேமிக்கத் தெரிந்த ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தை எப்போதும் கஷ்டத்தில் போட மாட்டார். கணவர்கள் திடீர் பணப் பிரச்சினையை எதிர்கொள்ளும் போது, அத்தகைய பெண்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்து உதவிச் செய்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |