பப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
சத்துக்கள் நிறைந்த பப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பப்பாளி
பொதுவாக பழங்களில் சத்துக்கள் அதிகமாகவே இருக்கின்றது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளது.
இவை செரிமானத்தினை மேம்படுத்தவும், எடையை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தினையும் பராமரிக்கின்றது.
இவ்வளவு நன்மைகள் உள்ள பப்பாளியை சிலர் எடுத்துக்கொண்டால் உடலில் சில பிரச்சனையை சந்திக்க நேரிடும். அந்த வகையில் பப்பாளியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பழுக்காத அல்லது பாதி பழுத்த பப்பாளியை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதிலுள்ள லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் குறை பிரசவம், பிரசவத்தில் சிக்கலும் ஏற்படும். ஆதலால் கர்ப்பணி பெண்கள் அதிகமாக பப்பாளி எடுக்க வேண்டாம்.
பப்பாளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள நிலையில், சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் சி ஆக்சலேட்டை உருவாக்கி, பிரச்சனையை தீவிரமாக்குகின்றது.

லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் பப்பாளியை சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இவை மேலும் அரிப்பு தும்மல், சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துமாம்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளியை தவிர்க்கவும். ஏனெனில் தைராய்டு ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, சோர்வு, குளிர், நடுக்கம், மந்தநிலை இவற்றினை ஏற்படுத்துகின்றது.

இதே போன்று இதய பிரச்சனை உள்ளவர்களும் பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும். இதிலுள்ள சில இயற்கையான சேர்மங்கள், வளர்சிதை மாற்றத்தின் போது ஹைட்ரஜன் சயனைடை வெளிப்படுத்தி, ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் இதய துடிப்பில் பிரச்சனை ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |