காலை உணவுக்கு 2 முட்டையும், 5 பிரட்டும் இருந்தால் போதும்.. பிரட் கொத்து தயார்
காலை உணவிற்கு சத்தான பிரெட் கொத்து எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் எப்பொழுதும் இட்லி, தோசை என சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று வித்தியாசமான உணவு தான் பிரெட் கொத்து.
வீட்டில் பிரெட் மற்றும் முட்டை இருந்தால் போதும். அட்டகாசமான பிரெட் கொத்து செய்து அசத்தலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வெறும் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய பிரெட் கொத்து குறித்து இந்த பதிவில் இன்னும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
சிக்கன் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
முட்டை - 2
உப்பு - சுவைக்கேற்ப
பிரட் - 5 துண்டுகள்

செய்முறை
பிரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்.
அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
மற்றொரு பவுலில் மிளகாய் பொடி, சிக்கன் பொடி, கரம்மசாலா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதனை வதக்கும் முட்டையில் சேர்க்கவும்.
இதனை நன்றாக கிளறியதும், அதனுடன் பிரெட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக மிளகுபொடி, மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பிரெட் கொத்து தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |