இந்த பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாதாம்.
யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை, அந்தந்த சீசனுக்கு கட்டாயம் சாப்பிட்டு வருவார்கள். இனிப்பு சுவை அதிகமாக கொண்ட மாம்பழத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றார்.
ஒரு மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, பி6, நார், தாமிரம், பொட்டாசியம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளதால், முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கின்றது.

மேலும் பல சத்துக்களைக் கொண்ட மாம்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது
மாம்பழத்தில் இயற்கையாகவே நிறைய சர்க்கரை உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. இதை அவர்கள் அளவோடு தான் சாப்பிட வேண்டும். அது மட்டுமின்றி இவர்கள் சாப்பிடும் அளவையும் கவணிக்க வேண்டும் இல்லாவிட்டால் இது அவர்களுக்கு பல பிரச்சனைகளை அதிகரிக்கும். அவர்கள் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.
சில உணவுகள் சாப்பிட்டால் சிலருக்கு அது ஒவ்வாமை ஏற்படும். அந்த பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இந்த ஒவ்வாமை வேதிப் பொருட்கள் நிறைந்தது. அதினால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு உடலில் அரிப்பு அல்லது தடிப்பு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

அது மட்டுமின்றி நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சபாப்பிடக்கூடாது. ஏனென்றால் மாம்பழம் சாப்பிட்ட பிறகு நம் வயிற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இதினால் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம். அதினால் செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது
வெப்பத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மாம்மபழம் நம் உடலில் வெப்பத்தை தேக்கி வைக்கிறது. இதனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் அது மேலும் வெப்பத்தை அதிகரித்து, தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனை ஏற்படும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |