இந்த நபர்களை அவமதிப்பவர்கள் நரகவேதனையை அனுபவிப்கபார்களாம்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், சிறந்த அரசியல் ஆலோசகரும், ராஜதந்திரியுமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' என்ற நூலில் வாழ்க்கை நெறிமுறைகள், செல்வ மேலாண்மை மற்றும் வெற்றிக்கான பல முக்கிய கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, செல்வம் மற்றும் வளமான வாழ்க்கையைப் பேணுவதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கவழக்கங்களையும் அவர் வலியுறுத்துகிறார்.

சாணக்கிய நீதியில் குறிப்பிட்ட சிலரை மதிப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களை அவமதிப்பதைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் சாணக்கியர் வலியுறுத்துகிறார்.
அந்தவகையில், யாரையெல்லாம் வாழ்வில் ஒருபோதும் அவமதிக்கவே கூடாது என்று சாணக்கியர் வலியுறுத்துகிறார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஒருபோதும் அவமதிக்கவே கூடாத விடயங்கள்

நெருப்பு
சாணக்கிய நீதியின் பிரகாரம் நெருப்பை அவமதிப்பது பெரும் பாவமாக கருதப்படுகின்றது. காரணம் நெருப்பு பஞ்சபூதங்களில் ஒன்று. அது தூய்மை மற்றும் மாற்றத்தின் அடையாளமாகும். இந்து சமயத்தில் நெருப்பு தெய்வமாக வணங்கப்படுகிறது. எனவே, அதை அவமதிப்பது தவறாகக் கருதப்படுவதுடன் வாழ்வில் பல துன்பங்களையும் ஏற்படுத்தும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் நம் வாழ்க்கைக்கு அறிவும், ஒழுக்கமும், சரியான வழிகாட்டுதலும் வழங்குபவர்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துவது நம் கடமையாகும். அவர்களை அவமதிப்பது பெரிய தவறாகக் கருதப்படுகிறது. சாணக்கிய நீதியின் பிரகாரம் ஆசிரியரை அவமதிப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் பல வழிகளிலும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

பெண்கள்
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெண்கள் ஒரு வீட்டின் லட்சுமியாகவும், உயிரைப் படைத்து வளர்ப்பவர்களாகவும் போற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துவது நம் பண்பாடு. பெண்களை இழிவுபடுத்துவதோ, அவமதிப்பதோ பெரும் பாவமாகக் கருதப்படுகிறது.
பசு
தெய்வீகம், செழிப்பு மற்றும் வாழ்வாதாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனைத் துன்புறுத்துவதோ அல்லது அவமதிப்பதோ தவறாகப் பார்க்கப்படுகிறது.பசுவை அவமதிப்பவர்கள் நரகத்துக்கு செல்வார்கள் எனவும் , வாழும் போதே பல துன்பங்களை அனுபவிப்பார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

குழந்தைகள்
குழந்தைகள் தூய்மை, அன்பு மற்றும் எதிர்காலத்தின் நம்பிக்கை. அவர்களை அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்ப்பது நம் பொறுப்பு. குழந்தைகளைத் துன்புறுத்துவதோ அல்லது அவமதிப்பதோ அவர்களின் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். குழந்தைகளை துன்புறுத்துபவர்களும் அவமதிப்பவர்களும் பெரும் துன்பத்தை அனுபவிப்பார்கள் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |