இவங்க ரொம்ப மோசமானவங்க.. வம்பு வச்சிக்காதீங்க!
ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒருவரது பிறந்த ராசி, நட்சத்திரம், மாதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர்களின் சிறப்பான குணங்களை தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன் அவர்களின் குணமும் இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள்.
இவர்களிடம் ஏதாவது பிரச்சினை இருந்தால் அவ்வப்போது தீர்த்துக் கொள்ள வேண்டும். வஞ்சம் வைத்து பழிவாங்கும் குணம் இருப்பதால் எப்போதும் வெடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
பெரும்பாலும் அவர்களுக்கு கோபம் வந்தால் வாயால் பேசுவதை விட கையால் தான் அதிகமாக பேசுவார்கள்.
அந்த வகையில், ஜோதிடத்தின் மிகவும் மோசமான குணம் கொண்டவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
குணத்தில் மோசமானவர்கள் பிறந்த மாதம்
மார்ச் | ஜோதிடத்தின்படி, மார்ச் மாதம் பிறந்தவர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள். சண்டையிடும் குணம் இருப்பதால் மற்றவர்களிடம் எதற்காகவும் பயம் கொள்ளமாட்டார்கள். துடிப்பானவர்களாக இருக்கும் இவர்களிடம் சண்டை செய்வது தவறு. சவாலான சூழ்நிலைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். எளிதில் கோபப்பட்டாலும் விரைவில் அமைதியாகி விடுவார்கள். வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ளும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது. அடிக்கடி கோபம் கொள்வதால் யாரும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். |
மே | ஜோதிடத்தின்படி, மே மாதம் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியானவர்களாக இவர்களிடம் ஒரு அளவுக்கு தான் பிரச்சினை செய்ய வேண்டும். அவர்கள் பொறுமையை இழந்து விட்டால் சண்டைக்கு வருவார்கள். ஆக்ரோஷமாக நடந்து கொள்வதால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பிரச்சினை செய்தவர்களை பழி வாங்க சமயம் பார்த்து காத்திருப்பார்கள். |
ஆகஸ்ட் | ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய சுய மரியாதையை விட்டுவிட்டு எந்த வேலையும் செய்யமாட்டார்கள். வன்முறையாளர்களாக இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் சிக்கிக் கொள்வார்கள். துணிச்சலுடன் போராடும் நபர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் புண்படும் படி நடந்து கொள்ள மாட்டார்கள். கோபத்தை தணித்து கொள்வதற்காக மற்றவர்களை பயன்படுத்துவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).