உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? காலையில் இந்த உணவை எடுத்துக்கோங்க
எடையைக் குறைப்பதற்கு காலையில் சாப்பிட வேண்டிய உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை அதிகரிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. எடையைக் கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் அவசியமாகும்.
உடல் எடையைக் குறைப்பதற்கு நமது உணவுமுறைகள் மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் உடல் எடையினைக் குறைப்பதற்கு காலை வேளையில் சாப்பிட வேண்டிய உணவைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
புரதம் நிறைந்த முட்டைகளில் கலோரிகள் குறைவாக உள்ளதால், இவை எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.
வெறும் வயிற்றில் சியா விதை தண்ணீர் குடிப்பதால் எளிய முறையில் எடையை குறைக்க முடியும்.
எடையைக் குறைப்பதற்கு புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள முளைத்த தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.

எடை இழப்பிற்கு பாதாம் மிகவும் ஏற்றதாக காணப்படுகின்றது. இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது மிகவும் சிறந்ததாகும்.
காலை வெறும்வயிற்றில் பழங்களை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலை சுறுசுறுப்பாகவும் வைத்து, தொப்பை கொழுப்பையும் கரைக்கவும் செய்கின்றது.
உடல் எடை அதிகரித்தால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், புற்று நோய், சுவாச பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, மூட்டு பிரச்சனை, செரிமான பிரச்சனைகள் மட்டுமின்றி மன அழுத்தத்தையும் ஏற்படுத்துமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |