மாலை 6 மணிக்கு மேல் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க... பாரிய பிரச்சனையை ஏற்படும்
மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மக்கள் விரும்பும் ஸ்நாக்ஸ்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வெளியில் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் வகைகள் உடம்பிற்கு கொடுதல் ஏற்படுத்துகின்றது.
அதிலும் குளிர்காலம் என்றால் மாலை 6 மணிக்கு வெளியே சென்று பஜ்ஜி, போண்டா, பீட்சா, பர்கர், சமோசா போன்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்கின்றனர்.
இவ்வாறு நாம் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகள் உடலின் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமானம் பாதிக்கப்படும்
மாலை 6 மணிக்கு மேல் நாம் சாப்பிடும் சிற்றுண்டிகள் செரிமானத்தை பாதிப்பதுடன், உடலின் வளர்சிதை மாற்றத்தினை மோசமாக பாதிக்கவும் சயெ்கின்றது.
மேலும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதுடன், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.
மேலும் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடுகின்றது.
இந்த உணவுகள் நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றது.

மாலையில் எந்த உணவை சாப்பிடலாம்?
வெண்ணெய் அதிகமான பீட்சா, பாப்கார்ன், அதிகம் சர்க்கரை கொண்ட இனிப்பு திண்பண்டம், பானி பூரி, பேல் பூரி போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
எண்ணெய் இல்லாமல் பொரித்த மக்கனா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.
வேக வைத்த இனிப்பு சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டை கடலை, மைதாவிற்கு பதிலாக கோதுமை மாவில் வேக வைத்த மோமோஸ் இவற்றினை சாப்பிடலாம்.
இரவில் தூக்கத்தை பெறுவதற்கு ஜங்க் ஃபுட் வகைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |