Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க பணத்தை வாரி இறைப்பார்.. நீங்க பிறந்த தேதியும் இருக்கா?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்பவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எண் 2 | எண் 2-ல் பிறந்தவர்கள் 2,11,20, 29 சந்திரனுடன் தொடர்புடையவர்களாக இருந்து மற்றவர்களின் உணர்ச்சிகள், உள்ளுணர்வு, உணர்திறன் ஆகியவற்றை புரிந்து கொள்வார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு துன்பம் தராமல் அவர்களுக்கு உதவிச் செய்வார்கள். இரக்கம், கருணை இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். மற்றவர்களுக்கு தோள் கொடுக்கும் தன்மை இவர்களை வாழ்க்கையில் மேம்பட வைக்கும். |
எண் 9 | 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் எண் 9 ஆக இருக்கும். இவர்கள் செவ்வாய் செல்வாக்கு அதிகமாக உள்ளவர்களாக இருப்பார்கள். அன்பு மற்றும் சமூக சேவைகள் செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். அன்பு, கருணை மற்றவர்களை விட இங்கு அதிகமாகவே இருக்கும். சமூகத்தை மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் சமூதாயத்திற்கும் உதவி செய்வார்கள். இவர்களை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். |
எண் 6 | 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வீனஸ் ஆட்சி செய்யும். இதனால் அன்பு அதிகமாகவே இருக்கும். மோதல் இல்லாத நிலை எப்போதும் முயற்சிப்பார்கள். அதிக பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த நல்ல மனம் மற்றவர்கள் மத்தியில் அறியப்படச் செய்யும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).