இந்த தேதியில் பிறந்தவங்ககிட்ட ரகசியத்தை சொல்லாதீங்க- எண்கணிதம் சொல்வது என்ன?
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரகசியங்களை பாதுகாக்க முடியாது. மாறாக அவர்கள் அவர்களின் ரகசியங்களுடன் மற்றவர்களின் ரகசியங்களையும் வெளியில் கூறி விடுவார்கள். அப்படியானவர்கள் என்னென்ன தேதிகளில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
எண் 5 | 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் கணிதத்தின் படி,பிறரது வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமாக காட்டுவார்கள். அவர்கள் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் கூறி விடுவார்கள். அதே போன்று மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். |
எண் 3 | 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவரிடமும் நட்பாக பழகுவார்கள். ஆனால் வாய்ப்பு கிடக்கும் போது நட்பாக பழகியவர்களை ஏமாற்றி விடுவார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் பற்றிய ரகசியங்களை வெளியில் கூறி விடுவார்கள். ஆபத்தானவர்களாக இருப்பார்கள். |
எண் 9 | 9, 18 ,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் நன்றாக பழகி அவர்கள் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்வார்கள். அதன் பின்னர் வாய்ப்பு வரும் அவர்கள் பற்றிய உண்மையை வெளியில் கூறி விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).